வாயில் துணியை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வாயில் துணியை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வாயில் துணியை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

கும்பகோணம்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவினர் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே வாயில் வெள்ளை துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாவட்ட பொது செயலாளர் ஓ.வி.எம். வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நலங்கிள்ளி பேசினார். முடிவில் மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் கருணாகரன் பிள்ளை நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story