தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிராகதீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
அக்னிபத் திட்டத்துக்கு எதிராகதீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் வட மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு செயல் தலைவர் சகாய பிரபின் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் நரேந்திர தேவ், நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் திடீரென கையில் தீப்பந்தத்தை ஏந்தி கோஷங்களை எழுப்பினார். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனே அந்த தீப்பந்தத்தை கைப்பற்றி தீயை அணைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.