கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மாரிவெங்கடேஷ் ஆழ்வார் தலைமை தாங்கினார். நெல்லை கோட்டச்செயலாளர் ஜெயா வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் பாலமுருகன், மகளிர் அணி செயலாளர் ரதி அதித்தநங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியை தொடங்கி கால்நடை ஆய்வாளர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஆறுமுகம், தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கத்தை சேர்ந்த இசக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story