கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ராஜசேகர், மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். லட்சுமி மில் மேம்பாலம் முதல் ெரயில் நிலையம் மேம்பாலம் வரை, புதுரோடு, கடலையூர் சாலை, மாதாங்கோவில் சாலை, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, மந்தித்தோப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story