மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.
கட்சி நிர்வாகிகள் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். முடிவில் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story