பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் இரு தரப்பினர் மோதலில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். பிரபுவின் வீட்டிற்கு சென்ற பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து வேலம்பட்டி பஸ் நிறுத்ததில் மாவட்ட பா.ஜனதா சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் சிவபிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), நாகராஜ் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட பொது செயலாளர்கள் கோவிந்தராஜ், மீசை அர்ஜீனன், கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாவட்ட பார்வையாளர் முனிராஜ், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில தலைவர் ராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில், மாவட்ட துணை தலைவர்கள் செந்தில், எம்.ஆர்.ராஜேந்திரன், சங்கர், வெங்கடசலபதி, மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட தமிழ்வளர்ச்சி பிரிவு திருமுருகன், ஓ.பி.சி. அணிபிரிவு தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே முன்னாள் ராணுவவீரர்கள் சங்கத்தின் சார்பில் பிரபுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும், மவுனஅஞ்சலி செலுத்தினர்.