பாபர் மசூதி இடிப்பு தினம்: கடலூரில், த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கடலூரில், த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந்தேதி முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அஷ்ரப் அலி, மாவட்ட செயலாளர் மதார்ஷா, துணை செயலாளர்கள் ஷாகுல்ஹமீது, காதர்ஷெரீப், காசீம் அபுபக்கர், ம.ம.க. நிஜாமுதீன், அப்துல்ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., ம.ம.க. மாநில அமைப்பு செயலாளர் ஹலீம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் வி.சி.க. கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், துணை மேயருமான தாமரைச்செல்வன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, ம.ம.க. மாவட்ட செயலாளர் ரஹீம், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், த.வா.க. மாநிலக்குழு கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த் உள்பட த.மு.மு.க., ம.ம.க. நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முத்தவல்லிகள் கலந்து கொண்டனர்.