சாலைகளை சீரமைக்கக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


சாலைகளை சீரமைக்கக்கோரி  தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

சாலைகளை சீரமைக்கக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

சாலைகளை சீரமைக்கக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

சூழால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். நெய்யாறு இடது கரை கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் ஊரம்பு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்சிறை ஒன்றிய செயலாளர் கிளாட்சன் தலைமை தாங்கினார். சூழால் ஊராட்சி செயலாளர் சனில் முன்னிலை வகித்தார், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஐடன்சோனி கலந்து கொண்டு பேசினார். இதில் கொல்லங்கோடு பேரூர் முன்னாள் செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story