கொள்முதல் விலையை உயர்த்த கோரிகிருஷ்ணகிரியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் விலையை உயர்த்த கோரிகிருஷ்ணகிரியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி, கிருஷ்ணகிரி ஆவின் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி, கிருஷ்ணகிரி ஆவின் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், வெங்கடாசலம், குணசேகரன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில தலைவர் முகமது அலி, மாநில துணைத்தலைவர் சிவாஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.. இதில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

தொடர்ந்து மாநில தலைவர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் நெருக்கடி

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இதே போல், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஆரம்ப சங்கங்கள் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், ஆரம்ப பால் உற்பத்தியாளர் சங்கங்கள் படிப்படியாக மூடக்கூடிய ஆபத்து ஏற்படும். ஆவினுக்கு பால் வராது.

தனியார் பாலை நம்பித்தான் பொதுமக்கள் இருக்க வேண்டும். ஆவின் நெருக்கடி நிலைக்கு, தமிழக அரசின் தவறான நடவடிக்கையே காரணமாகும். தனியார் பால் கொள்முதல் விலையைவிட ஆவினில் 10 ரூபாய் குறைவாக விலை நிர்ணயித்துள்ளனர். எனவே, உடனடியாக பால் கொள்முதலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்தி, பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.45 எனவும், எருமைப்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.54 எனவும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும்.

போராட்டம்

கால்நடை தீவனங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களை அழைத்துச் பேச வேண்டும் அடுத்த கட்டமாக பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story