தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி அரசே இந்தத் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட கரூவூல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் இளவேனில், கருவூல கணக்குதுறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, நிர்வாகிகள் ஸ்ரீநாத், சக்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். கருவூலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த துறையில் உள்ள பணியாளர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.