ஏம்பலில் கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்


ஏம்பலில் கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்
x

ஏம்பலில் கடைகள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் - புதுக்கோட்டை சாலை இருவழி பாதையாக அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக சாலையின் இரு புறங்கிலும் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சுந்தர்ராஜ் தலைமையில் 14 கடைகள், 2 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள நோட்டீஸ் கொடுத்தும் 2 முறை வாய்ப்பு வழங்கியும் பொதுமக்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாததால் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். ஏம்பல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், ஏழை எளிய மக்களின் கடைகள் மற்றும் வீடுகள் மட்டுமே இடித்து அகற்றப்பட்டுள்ளதாகவும், வசதி படைத்தவர்களுடைய வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டினர். வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த் துறையினர் பட்டா எப்படி வழங்க முடியும். மேலும் நீர்நிலை பிடிப்புகளில் எப்படி பட்டா வழங்கி இருக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.


Next Story