சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10 வீடுகள் இடித்து அகற்றம்
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் கரையில் கட்டப்பட்ட 10 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் கரையில் கட்டப்பட்ட 10 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் செல்லும் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, வீடுகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வீடுகளை காலிசெய்ய உரிமையாளர்களுக்கு பொதுப்பணித்துறையினர் குறிப்பிட்ட காலக்கெடு விதித்து நோட்டீஸ் அளித்தனர். ஆனால் காலக்கெடு முடிந்தும் வீடுகளை காலி செய்யவில்லை.
வீடுகள் இடித்து அகற்றம்
இதைத்தொடர்ந்து பவானிசாகர் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
இதையொட்டி சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுமத்திரா மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் மாரிமுத்து உடன் இருந்தனர்.