சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
x

அரியலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மார்க்கெட் தெருவில் நாளுக்கு நாள் சாலையோர கடைகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடைத்துறை அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள் வரை சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருந்தன. ஆனால் தற்போது பல்வேறு தரைக்கடைகள் அமைக்கப்பட்டு சாலையே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகம், போலீஸ் நிலைய வாயிலை மறைத்து உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதால் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. நடந்து செல்வதற்கான இடத்தில் தரைக்கடைகள் உள்ளதால், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story