நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிதிருச்செந்தூரில் தி.மு.க. கையெழுத்து இயக்கம்சனிக்கிழமை தொடங்குகிறது


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிதிருச்செந்தூரில் தி.மு.க. கையெழுத்து இயக்கம்சனிக்கிழமை தொடங்குகிறது
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி திருச்செந்தூரில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் நாளை (சனிக்கிழமை) கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கையெழுத்து இயக்கம்

மருத்துவக் கல்வி பயில்வதற்கு நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக மக்களின் உணர்வை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர்களிடம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தொடக்க நிகழ்ச்சி

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்செந்தூர் கே.டி.எம். திருமண மண்டபத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story