பேரூராட்சி துணை தலைவா் குறித்து யூடியூப்பில் அவதூறு: 3 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி அருகே பேரூராட்சி தலைவர் குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்பிய 3 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஞானமணி. கெங்குவார்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர். இவரது மகள் ஸ்டீபன் தேவதானப்பட்டி போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், கெங்குவார்பட்டி பேரூராட்சியில் சுகாதார பணியாளர்களாக வேலை செய்த முருகன் (38) கண்ணன் (40) ஆகியோர் சரிவர வேலை செய்யாததால் பேரூராட்சி நிர்வாகம் அவர்களை இடமாற்றம் செய்தது.
இந்த சம்பவத்திற்கு எனது தந்தை ஞானமணி தான் காரணம் என்று கூறி, அவர்கள் 2 பேரும் போடியை சேர்ந்த ஜெகநாதன் (45) என்பவருடன் சேர்ந்து தனியார் யூடியூப் சேனலில் பொய்யான தகவல்களை அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story