மான்களை வேட்டையாடி சமைத்து ஓட்டலில் விற்பனை


மான்களை வேட்டையாடி சமைத்து ஓட்டலில் விற்பனை
x
தினத்தந்தி 2 Dec 2022 1:00 AM IST (Updated: 2 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் மான்களை வேட்டையாடி சமைத்து ஓட்டலில் விற்ற மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டையில் மான்களை வேட்டையாடி சமைத்து ஓட்டலில் விற்ற மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனியார் ஓட்டல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளட்டி வனப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்த பிரசாந்த் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் குடிசலூரை சேர்ந்த மல்லப்பா மகன் மல்லேசன் (32) மற்றும் மாதேஷ் (32) ஆகியோரும் ஓட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதனை அறிந்த ஓசூர் வனக்கோட்டை வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் 3 பேரும் மான்களை வேட்டையாடி ஓட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதைதொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த தனியார் ஓட்டலுக்கு சென்றனர். வனத்துறையினரை கண்டதும் மேலாளர் உள்பட 3 பேரும் மான் இறைச்சியை அங்கு மண்ணில் குழி தோண்டி புதைத்ததாக தெரிகிறது. உடனே வனத்துறையினர் மேலாளர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம்விதித்தனர்.


Next Story