வாகனத்தில் அடிபட்டு மான் படுகாயம்


வாகனத்தில் அடிபட்டு மான் படுகாயம்
x

வாகனத்தில் அடிபட்டு மான் படுகாயம் அடைந்தது.

விருதுநகர்

விருதுநகர் அழகாபுரி ரோட்டில் பஜார் போலீஸ் நிலையம் அருகே புள்ளிமான் ஒன்று சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற வாகனத்தில் அடிபட்டு படுகாயமடைந்தது. 2 கால்களிலும் அடிபட்ட நிலையில் நகர முடியாமல் சாலையில் கிடந்த புள்ளி மானை பஜார் போலீசார் மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் படுகாயமடைந்த புள்ளிமானை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


Next Story