அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்


அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்
x
தினத்தந்தி 6 April 2024 10:29 AM IST (Updated: 6 April 2024 11:43 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், போராட்டத்தில் ஈடுபட்ட 19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story