விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம்
விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம்
அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி 10,12-ம் வகுப்பு மாணவர்கள் எழுத உள்ள அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், 1001 முறை ராமநாம ஜெபமும் நடைபெற்று, பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.