மியாவாக்கி காடுகள் திட்டத்தில் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு
மியாவாக்கி காடுகள் திட்டத்தில் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டம், திருச்சி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து திருச்சி கோட்டத்தை சுற்றி 'மியாவாக்கி காடுகள் திட்டத்தின்' கீழ் 18 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி தெற்கு ரெயில்வே அதிகாரிகள் காலனியில் திருச்சி தேசிய கல்லூரியை சேர்ந்த ரோட்ராக்ட் மாணவ-மாணவிகள் 100 மரக்கன்றுகளை நட்டனர். இதனை தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் பி.சுரேஷ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், உதவி கோட்ட மேலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரெயில்வே அதிகாரிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story