ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்


ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்
x

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

தேனி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95). முதுமை காரணமாக தேனி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அவர் நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.

இதையடுத்து நேற்று மாலையில் பழனியம்மாளின் இறுதி ஊர்வலம் நடந்தது. பின்னர் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன், சசிகலா, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.


Next Story