கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு வயதுமூப்பு காரணமாக இன்று காலை 8 மணியளவில் கோவை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85. புலவர் செ.இராசு, ஜனவரி 2, 1938-இல் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். மனைவி கவுரி அம்மாள், மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (85) அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள் செப்பேடுகள் சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.