ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்சன் (வயது51), கூலித் தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மழைநீர் ஓடையின் மேல்பகுதியில் கட்டியுள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு ஓடையில் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீபன்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் புதுக்கடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story