இண்டூரில் கர்ப்பிணி திடீர் சாவு
இண்டூரில் கர்ப்பிணி திடீரென இறந்தார்.
தர்மபுரி
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 22). கர்ப்பிணியான இவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கர்ப்பிணி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story