வாகனம் மோதி மூதாட்டி பலி


வாகனம் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 15 Oct 2023 7:30 PM GMT (Updated: 15 Oct 2023 7:30 PM GMT)

வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேவசமுத்திரம் ஆஞ்சநேயர் கோவில் பாலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story