கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
x

லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் நேற்று காலையில் பிணமாக மீட்கப்பட்டார். நண்பரை காப்பாற்றிவிட்டு அவர் உயிரை விட்டுள்ள பரிதாபம் நடந்துள்ளது.

திருச்சி

லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் நேற்று காலையில் பிணமாக மீட்கப்பட்டார். நண்பரை காப்பாற்றிவிட்டு அவர் உயிரை விட்டுள்ள பரிதாபம் நடந்துள்ளது.

கல்லூரி மாணவர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் - பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் சரவணன் (வயது 19). இவர் குமுளூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சரவணன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ரியாஸ் (15), ஸ்ரீதர் மகன் தருண் (16), தவமணி மகன் பிரகதீஸ் (19), சிவக்குமார் மகன் சுரேந்தர் (16) ஆகியோருடன் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.

இந்த நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற ரியாஸ் சுழலில் சிக்கி உயிருக்கு போராடினார். இதைக்கண்ட சரவணன் துணிச்சலாக சென்று ரியாசை காப்பாற்றினார். ஆனால் சரவணன் புதை மணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதைக்கண்ட நண்பர்கள் உடனடியாக லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சரவணனை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆகியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. காலை 8.45 மணி அளவில் சரவணன் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றிவிட்டு மாணவர் சரவணன் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

------

சரவணன்

------


Related Tags :
Next Story