திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் - பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் - பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா
x

கண்ணாடி விமானங்களில் மாட வீதி உலா வந்த பஞ்ச மூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் இரவில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. 7-ம் நாள் விழாவன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 10 நாள் விழாவன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான இன்று கண்ணாடி விமானங்களில் மாட வீதி உலா வந்த பஞ்ச மூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகா தீபத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story