அய்யனாரப்பன் கோவிலில் ஆடித்திருவிழா
ஓட்டேரிப்பாளையம் அய்யனாரப்பன் கோவிலில் ஆடித்திருவிழா
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொற்கலை பூரணி சமேத அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அய்யனாரப்பன் ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் மூலவர் பொற்கலை பூரணி சமேத அய்யனாரப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவில் சாமி வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஓட்டேரிப்பாளையம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story