காரைக்குடி அழகப்பா நிகழ் கலைக்கல்லூரி சார்பில்- மாணவிகளின் பரத நாட்டிய விழா


காரைக்குடி அழகப்பா நிகழ் கலைக்கல்லூரி சார்பில்-  மாணவிகளின் பரத நாட்டிய விழா
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அழகப்பா நிகழ் கலைக்கல்லூரி சார்பில் மாணவிகளின் பரத நாட்டிய விழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் தமிழ் கலையின் முக்கிய கலையான பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இதில் மாணவிகள் தேவிஸ்ரீ, ஜெஸ்லின்மரின் ஆகியோர் சலங்கையுடன் ஆடினர். அழகப்பா நிகழ் கலை கல்லூரியின் 2-வது பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில் மாணவிகள் முதல் முறையாக சலங்கை அணிந்து ஆடிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பரதநாட்டியம் கற்கும் மாணவர்கள் நாட்டிய கலையை கற்க ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது முதல் முறையாக சலங்கை அணிந்து ஆடும் நிகழ்வு சலங்கை பூஜை விழாவாக நடத்தப்பட்டது. அழகப்பா நிகழ் கலை கல்லூரி நாட்டிய பள்ளியில் தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அழகப்பா கல்விக்குழுமத்தின் தலவைர் டாக்டர் ராமநாதன் வைரவன் மற்றும் செயலர் செல்வி தேவி அலமேலு ஆகியோரது பாராட்டுதலுடன் அறக்கட்டளை இயக்குனர் நரேஷ், மேலாளர் காசி விஸ்வநாதன், உமையாள் ராமநாதன், பெண்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹேமமாலினி மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அழகப்பா நிகழ் கலை கல்லூரியின் முதல்வர் கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் அடைக்கலா ஜெயா நன்றி கூறினார். முன்னதாக வளரும் இளம் நடன கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story