தம்மம்பட்டியில் 82 மில்லி மீட்டர் மழை பதிவு


தம்மம்பட்டியில் 82 மில்லி மீட்டர் மழை பதிவு
x
தினத்தந்தி 18 Oct 2023 1:15 AM IST (Updated: 18 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தம்மம்பட்டியில் 82 மில்லி மீட்டர் மழை பதிவானது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாயினர்.

சேலம்

சேலம்:-

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தம்மம்பட்டியில் 82 மில்லி மீட்டர் மழை பதிவானது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாயினர்.

பலத்த மழை

சேலத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் மெய்யனூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.

அதே போன்று கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, மணக்காடு, களரம்பட்டி, பள்ளப்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட ஏராளமானவர்களின் வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மாநகரில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர்் புகுந்தது. மேலும் மாநகரில் மிகவும் தாழ்வான சில இடங்களில் குடியிருப்புகளில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் கலந்து சென்றதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

மில்லி மீட்டர்

நேற்று முன்தினம் மாவட்டத்தில் பதிவாகி உள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

தம்மம்பட்டி- 82, மேட்டூர்-57.40, சேலம்-53.60, ஆத்தூர்-49, பெத்தநாயக்கன்பாளையம்-44, ஓமலூர்-41, கெங்கவல்லி-35, சங்ககிரி-25, தலைவாசல்-21, எடப்பாடி-16., 40, ஏற்பாடு-16.20, காடையாம்பட்டி-16, வீரகனூர்-12, ஆணைமடுவு-11, கரியக்கோவில்- 7 மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை முதல் மாலை வரை மேக மூட்டமாகவே காணப்பட்டன. அவ்வப்போது லேசான மழை தூறல் விழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Related Tags :
Next Story