சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்


சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்
x

விருத்தாசலம் ஒன்றியத்தில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

ஒன்றியக்குழு கூட்டம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் மலர் தலைமை தாங்கினார். துணை தலைவர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவா வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகள், கோாிக்கைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-

தானிய உலர்களம்

ஆனந்த கண்ணன்(சுயே):- டி.மாவிடந்தல் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் கிராமத்துக்கு செல்லும் சாலை, சிறுவம்பாரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளையும் சீரமைத்து தர வேண்டும். தானிய உலர் களம் அமைத்து தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா:- கவுன்சிலரின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

செல்வராசு(பா.ம.க.) :- அரைகுறயைாக அமைக்கப்பட்டுள்ள குப்பநத்தம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும். புதுக்கூரைப்பேட்டை அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் அமைக்கப்பட்டதால் சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி:- விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் தெரிவிப்பதில்லை

பூங்கோதை(பா.ம.க.):- பரவலூரில் இருந்து கலரங்குப்பம், எருக்கன்குப்பம் செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்(ராதிகா):- நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து கவுன்சிலர்கள் சரவணன், பாக்யராஜ், செந்தில்குமார், பச்சமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story