முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு


முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 3 May 2023 2:30 AM IST (Updated: 3 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது. அதன்படி, கடந்த வாரம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக காணப்பட்டது.

இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 117 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 517 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- பெரியாறு 8.4, தேக்கடி 6.4, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 16.6, வைகை அணை 2, சோத்துப்பாறை 12, மஞ்சளாறு 2, பெரியகுளம் 3.4, வீரபாண்டி 12, அரண்மனைபுதூர் 4.6, ஆண்டிப்பட்டி 26.


Related Tags :
Next Story