தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

புதுக்கோட்டை-திருச்சிக்கு இரவில் அதிக பஸ்கள் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு நேரடியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் பகல் நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகவோ, அல்லது ஒரே நேரத்தில் வரிசையில் நின்று அடுத்தடுத்து புறப்படும் வகையில் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேரிடையாக பஸ்கள் இயக்கப்படுவதின் எண்ணிக்கை மிககுறைவாக உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் திருச்சிக்கு செல்ல ஏராளமான பயணிகள் காத்திருக்க வேண்டியது உள்ளது. காரைக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லக்கூடிய அரசு பஸ்கள் தான் உள்ளது. இதிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் பயணிகள் பலர் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைகின்றனர். அதனால் இரவு 10 மணக்கு மேல் பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக திருச்சிக்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுக்கோட்டை

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை நகாட்சி, மார்க்தாண்டபுரம் 2-ம் வீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை

ரவுண்டானா அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால்ரோடு கிராமம் திருச்சி - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. கறம்பக்குடி - தஞ்சாவூர் சாலை இணைப்பாகவும் இப்பகுதி உள்ளது. இதனால் இந்த நால்ரோடு பகுதியில் கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கிராமங்கள் சூழ்ந்த பகுதி. இங்கு அரசு கலை அறிவியல் கல்லூரியும் உள்ளது. ஆனால் இந்த நால்ரோடு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நால்ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

உயர்மின் கோபுரம் சரி செய்யப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். விஜயபுரம் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்கடை வீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் கடைவீதிக்கு வரும் பெண்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்திரசேகரன், விஜயபுரம்

சாலை வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் கோத்திரப்பட்டி ஊராட்சி, புலவன்பட்டிக்கு செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலை சேறும், சாறுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வு:தஙதுளஙளனாங

பொதுமக்கள், புலவன்படி.


Next Story