தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடிகொடிகள்

புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி நகராட்சி 18-வது வார்டு பெரிய பள்ளிவாசல் 3-வது தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெரு விளக்கு மின்சார கம்பிகள் மீது அருகே முளைத்துள்ள செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நல்லமுத்து, அறந்தாங்கி

பள்ளி வளாகத்தில் கட்டப்படும் கால்நடைகள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி ஊராட்சியை சேர்ந்த அம்மானிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1977-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லததால் பள்ளியின் அருகே உள்ளவர்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்திற்குள் பராமரிக்கிறார்கள். மேலும் வளாகத்திற்குள் வைக்கும் செடிகளையும் கால்நடைகளை விட்டு அடியோடு அழித்து விடுகிறார்கள். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அம்மானிப்பட்டு

நிறுத்தப்பட்ட அரசு பஸ்

புதுக்கோட்டையில் இருந்து திலகர் திடல், பழனியப்பா, பிருந்தாவனம், மச்சுவாடி, அணடக்குளம் விலக்கு, விஸ்வகர்மா நகர், ராஜாப்பட்டி, தர்ஹா, வாகவாசல் விலக்கு, வாகவாசல், மேக்குடிப்பட்டி, கேடையப்பட்டி ஆகிய கிராமங்கள் வரை காலை 8.30 மணிக்கும், இரவு 9 மணி இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது, இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

கண்ணையா, ராஜாப்பட்டி

நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை நகரப்பகுதியான டி.வி.எஸ். டோல்கேட், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை

குவிந்து கிடக்கும் குப்பைகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி நகரில் காவிரி வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் மஞ்சள்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்லும். தற்போது இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டபட்டு உள்ளத. இதனால் தண்ணீர் செல்லமுடியாமல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மணமேல்குடி.


Next Story