தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: 5-ம் சுற்று நிறைவில் பெண் காவலர் உள்பட 52 பேருக்கு காயம்
தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
தச்சங்குறிச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியின் 5-ம் சுற்று நிறைவில் பெண் காவலர் உள்பட 52 பேர் காயம் அடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த 8 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 380 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story