திருவாரூரில், சைக்கிள் பேரணி


திருவாரூரில், சைக்கிள் பேரணி
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருவாரூரில், சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை திட்ட இயக்குனர் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்


செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருவாரூரில், சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை திட்ட இயக்குனர் தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியினை ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் செஸ் ஒலிம்பியாட் குறித்து வரையப்பட்டிருந்த வண்ண கோலங்களை பார்வையிட்டார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அப்போது அவர் கூறியதாவது:மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த செஸ் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழக மாவட்டங்களில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட, வட்ட அளவிலும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியானது நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வர் ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் குணசேகரன், சதுரங்க கழக துணைத்தலைவர் முரளிதரன் மற்றும் சேவை சங்க நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story