இணைய குற்றங்கள் பெருகி வருகிறது


இணைய குற்றங்கள் பெருகி வருகிறது
x

இணைய குற்றங்கள் பெருகி வருகிறது என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியின் இளநிலைத்தமிழ்த்துறை ஆடவர் மன்றம் மற்றும் பெண்கள் மன்றம் சார்பில் கணினித்தொழில்நுட்ப அறிவும், இணையப்பாதுகாப்பும் என்ற தலைப்பில் வளர்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அசோக் தலைமை தாங்கினார். முதுநிலை விலங்கியல் துறை தலைவர் சேவற்கொடியோன் வரவேற்றார். இளநிலை தமிழ்த்துறை தலைவர் அருள்மொழி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்கென்னடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இன்றைய சூழ்நிலையில் இணைய குற்றங்கள் பெருகி வருகிறது. இதற்கு பின்னணியாக தொழில் நுட்ப சாதனங்களும், அதனை இயக்கும் அறிவுடையவர்கள் இருக்கிறார்கள். பொழுதுபோக்கு என்ற மாயையில் இன்றைய இளைஞர்கள் ஆபத்தை தேடி கொள்கிறார்கள். எனவே சைபர் குற்றம் குறித்த அறிவும், தொழில் நுட்ப கருவிகளை கையாளுவதிலும் விழிப்புணர்வு அவசியம் என்றார். நிகழ்ச்சியில் இணைய செயலிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் பெண்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரிபையாமீரா நன்றி கூறினார்.


Next Story