கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து


கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து
x

கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மதுரை

மதுரை,

கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து ெகாண்டனர்.

கோவில் திருவிழா

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் வெள்ளக்கல் கிராமத்தில் கலுங்கடி முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவில் விழாவையொட்டி, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஆடுகள் பலியிடுவது வழக்கம். பின்னர் உணவு சமைத்து பக்தர்களுக்கு கறிவிருந்து நடைபெறும்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்த கோவில் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கானோர்

இதையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடுகள் அனைத்தும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் 470 ஆடுகள் பலியிடப்பட்டன. பின்னர் உணவு சமைத்து, நேற்று காலை முதல் பக்தர்களுக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது. இதில், பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியாப்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story