விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடிகிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். இதனால், பொதுவழியில், பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


Next Story