தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள்


தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள்
x

வடகாட்டில் மின்மாற்றி பழுதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

மின்மாற்றி பழுது

வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதியில் உள்ள மின்மாற்றியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் அதனை தற்காலிகமாக சீரமைத்தனர். மேலும் ஆழ்குழாய் போர்வெல் கிணறுகளுக்கு செல்லக்கூடிய மின் இணைப்பை துண்டித்து விட்டனர்.

இதனால் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக இப்பகுதியில் சாகுடி செய்யப்பட்டுள்ள நெல், சோளம், வாழை மற்றும் மலர் செடிகள் தண்ணீர் இன்றி கருகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட முடிவு

இப்பகுதிகளில் எந்தவொரு ஆற்றுப்பாசனம் மற்றும் குளத்து பாசனமோ நடைபெறுவது இல்லை. முழுக்க முழுக்க ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகத்தான் விவசாயிகள் அனைத்து பயிர்களையும் பராமரித்து வருகிறார்கள். ஏற்கனவே அடிக்கடி ஏற்படும் மின் பழுது மற்றும் மின்வெட்டு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில், தற்போது வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின் மாற்றி பழுது காரணமாக வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டிய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.


Next Story