அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன


அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன
x

அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன

திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கொரடாச்சேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்வதால் வயலில் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அறுவடை எந்திரங்களை வரவழைத்து உதவ வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திருமக்கோட்டை மற்றும் வல்லூர், தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், பைங்காநாடு, மேலநத்தம், எளவனூர், களிச்சான்கோட்டை, கன்னியாகுறிச்சி, பாவாஜிகோட்டை ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் நடவு பணிகள் பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு தயாரான பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. மழைநீரில் மூழ்கி பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story