குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்


குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து  போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
x

குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி மாவட்டத்தில் நடைபெறும் குற்ற செயல்கள் மற்றும் விபத்துகளை தடுக்கும் பொருட்டும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நீதிராஜ், கோவிந்தராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து, சந்தன கட்டைகளை கடத்தி வந்ததை கண்டறிந்து அதில் தொடர்புடைய சன்னகிருஷ்ணனை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பணியை பாராட்டி போலீஸ் ஏட்டு செல்வக்குமாருக்கு நற்சான்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வழங்கினார்.

முன்னதாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் 4 சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களின் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story