குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம்


குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம்
x

குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதான திருமண மண்டபத்தில் நேற்று மாதாந்திர குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் திருச்சி மாவட்ட அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகள் நலன், சட்டவிரோத மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை போன்றவற்றை தடுப்பது, ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல், நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் டாக்டர்கள், சமூக நலத்துறை, நீதித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story