மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
திருவாரூர்
நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கந்தசாமி, சுமதி, பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்தமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ேபசினார். இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் நீடாமங்கலம் மேம்பாலபணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக நகர செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story