சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை


சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
x

தேவையான இடமின்றி மாடுகளை வளர்க்கக் கூடாது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சென்னையில் ஜனவரி மாதத்தில் இதுவரை சாலையில் சுற்றித்திரிந்த 163 மாடுகள் பிடிபட்டுள்ளன. மேலும் கடற்கரை பகுதிகள், திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

சென்னையில் 2 முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு போய் விடப்படும். மாடுகள் வளர்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் பேசவில்லை. அதற்கான இடம் இல்லாமல் சாலையை நம்பி மாடு வளர்க்கக் கூடாது.

கடந்த ஆண்டு சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.




Next Story