பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்


பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்
x

பொய்கை வாரச்சந்தையில் அதிக அளவில் விற்பனைக்கு மாடுகள் கொண்டு வரப்பட்டன.

வேலூர்

வேலூர் அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் மாட்டுச்சந்தை நேற்று நடந்தது. வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தனர். நேற்று மாடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. 1500-கும் மேற்பட்ட கறவைமாடுகள் விற்பனைக்காக வந்தன. இதனால் அதிகளவில் வெளி ஊரில் இருந்து வியாபாரிகள் பொய்கை மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து வியாபாரியிடம் கேட்டபோது வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மாடுகள் வரத்து குறைவாக காணப்பட்டன. இந்த வாரம் 1500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்ததால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மாடுகளை வாங்கிச்சென்றனர். வாரத்திற்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடைபெறும் பொய்கை வாரச் சந்தையில் இந்த வாரம் விற்பனை அமோகமாக இருந்ததாக தெரிவித்தார்.


Next Story