கழிவறை தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு
கழிவறை தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
மயிலாடுதுறை
தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாறு ராஜம்பாள் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று பொறையாறு அம்மா பள்ளி தெருவில் ஒரு வீட்டின் தோட்டத்தில் உள்ள பயனற்ற கழிவறை தொட்டியில் விழுந்துவிட்டது. மாட்டை பலர் தூக்க முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு சிறப்பு நிலைய அலுவலர் அருண்மொழி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர். துரித நடவடிக்கை எடுத்து பசுமாட்டை மீட்ட தீயணைப்பு படைவீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story