வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே உள்ள மரியமங்கலபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் (வயது 40). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அவரது பசுமாடு ஒன்று தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தோட்டத்தில் இருந்து கிணற்றுக்குள் அந்த பசு தவறி விழுந்தது. 60 அடி ஆழ கிணற்றில், 30 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இதனால் கிணற்று நீரில் பசுமாடு தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பீட்டர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பசுமாட்டை கிணற்றில் இருந்து மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story