மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி


மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி
x

மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், கழுகூர் ஊராட்சி செல்லமநாயக்கனூரியில் உடுமல்சீல் நாயக்கர் மந்தையில் பட்டவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நிகழ்ச்சியை நடத்த ஊர் மந்தை நாயக்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று நடந்த மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கரூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 14 மந்தையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாடுகள் வரவழைக்கப்பட்டு மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டவன் கோவில் எல்லைப் பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் கொத்துக் கொம்பு எல்லை தெய்வத்தின் அனைத்து மாடுகளை கொண்டு சென்று அங்கிருந்து நாயக்கர் மக்களால் மாடுகளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் பட்டவன் கோவில் வளாகத்தில் வெள்ளை துண்டை போட்டு 3 கன்னிப் பெண்கள் நிறுத்தப்பட்டு முதலில் வரும் மாடுகளுக்கு 3 கண்ணிகள் மூலம் மஞ்சள் பொடி தூவி வரவேற்கப்பட்டது. இந்த வரவேற்பில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுப்பள்ளம் பேரூர் மந்தையை சேர்ந்த மாடு முதல், 2-ம் இடங்களில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அனைத்து மந்தை மாடுகளும் பின் தொடர்ந்து வந்தது.இதில் 14 மந்தை நாயக்கர் மக்களும், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Next Story