விஷ வண்டுகள் கடித்து பசுமாடு சாவு


விஷ வண்டுகள் கடித்து பசுமாடு சாவு
x

விஷ வண்டுகள் கடித்து பசுமாடு செத்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் சிவா. என்ஜினீயரான இவருக்கு சொந்தமான 5 மாடுகள், அவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் காற்றுடன் பெய்த மழையால் அருகில் இருந்த பனைமரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் பறந்து, ஒரு இடத்தில் கட்டப்பட்டிருந்த 3 மாடுகளை கடித்தது. இதில் ஒரு மாடு அங்கிருந்து ஓடிவிட்டது. மற்ற 2 மாடுகளை விஷ வண்டுகள் கடித்ததில், சினையாக இருந்த பசுமாடு நேற்று முன்தினம் செத்தது. மேலும் விஷவண்டு கடித்ததில் ஆபத்தான நிலையில் உள்ள ஜல்லிக்கட்டு காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த குடும்பத்தினர் சோகத்தில் உள்ளதோடு, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மருந்துகள் தெளித்தும், வைக்கோல் போட்டு கொளுத்தியும் விஷ வண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் சில விஷ வண்டுகள் மட்டுமே செத்தன. மற்ற வண்டுகள் மரத்திலேயே உள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், விஷ வண்டுகளை முழுமையாக அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story